சென்னை

ன்று முதல் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக பணிகள் தனியார் மயமாகும் என அறிவிக்கப்பட்டதால் தங்கள் பணி குறித்து ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 

சென்னை மக்களின் சமீபத்தைய போக்குவரத்து வசதியான   சென்னை மெட்ரோ ரெயில் பணிகளில் ஏராளமான தனியார் ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். ஆனால் மெட்ரோ ரெயில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பல முக்கிய பொறுப்புக்களான தொழில் நுட்ப பணியாளர்கள், ரெயில் ஓட்டுனரக்ள் உள்ளிட்டவற்றில் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மொத்தம் 250 அரசு ஊழியர்கள் உள்ளனர்.

இவர்களில் 150 பேர் நிலையக் கட்டுப்பாட்டுப் பணியில் மற்றும் 100  பேர் ஓட்டுநர் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணியில் உள்ளனர். இந்நிலையில் இன்று முதல் மெட்ரோ ரெயில் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப பணிகள் படிப்படியாகத் தனியார் மயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் படியாக இன்று முதல் 8 ரெயில் நிலையங்களின் முழுப் பொறுப்பும் தனியார் வசம் அளிக்கப்பட உள்ளது மற்ற நிலையங்களும் சிறிது சிறிதாகத் தனியார் வசம் மாற உள்ளது.

இந்த நிலையங்களில் ரெயில் இயக்குபவர், தொழில்நுட்ப வல்லுநர்கள், நிலைய கட்டுப்பாட்டுபணியாள்ர்கள், பராமரிப்பு பணியாளர்கள் டிக்கட் வழங்குபவர் உள்ளிட்ட பணிகள் தனியார் மயமாக்கப்பட உள்ளது. இந்த நிலை மற்ற நிலையங்களிலும் பரவும் நிலையில் இந்த பணிகளில் உள்ள 250 ஊழியர்கள் தங்கள் பணியின் எதிர்காலம் குறித்து பெரிதும் கலக்கமடைந்துள்ளனர்.