டில்லி:
இணையதளம் மூலம் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு நாளைமுதல் ஜிஎஸ்டியுடன் சேர்த்து சேவைக்கட்டணம் வசூல் செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கட்டணம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த சேவைக்கட்டணத்தை, டிஜிட்டல் பரிவர்த்தணையை ஊக்கப்படுத்தும் வகையில், ரயில்வே நிறுத்தி வைத்திருந்த நிலையில், நாளை முதல் மீண்டும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி உடன் சேவைக்கட்டணமும் வசூலிக்கப்படும். ஏசி இல்லாத வகுப்பு டிக்கெட்டுக்கு ரூ15ம், ஏசி வகுப்புக்கு ரூ30 சேவைக்கட்டணமும், அத்துடன் ஜிஎஸ்டியும் வசூல் செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel