புவனேஸ்வர்:

டிசா மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக கிறிஸ்தவ பணியாற்றி வந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரிக்கு மேலும் இந்தியாவில் தங்கி சேவை செய்ய விசா மறுக்கப்பட்ட நிலையில், அவர் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த அவர் வசித்து வந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் எனிடினா. தற்போது 88 வயதாகும் இந்த கன்னியாஸ்திரி, 1966-ஆம் ஆண்டு பெர்ஹாம்பூருக்கு வந்தார். அவர் அங்கு தங்கி 5 ஆண்டுகளாக சமூக சேவை செய்து வந்தார். இதையடுத்து அவர் கடந்த 1971-ஆம் ஆண்டு அலிகண்டாவில் சுகாதார நிலையம் தொடங்கி அதன்மூலம் அந்த பகுதி மக்களுக்கு சுகாதார சேவை செய்து வந்ததாகவும், அத்துடன் கிறிஸ்தவ மதத்தை பரப்பியதாகவும் கூறப்பட்டது.

இவரது விசா முடிவடைந்த நிலையில், மேலும் விசாவை நீடிக்க இந்திய அரசு மறுத்துவிட்ட நிலையில், 10 நாட்களுக்குள் அவர் நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கடந்த 20-ஆம் தேதி எனிடினா ஸ்பெயினுக்கு சென்றுவிட்டார். இந்த தகவல் தற்போதுதான் வெளியாகி உள்ளது. எடினா வெளியேற்றப்பட்டது, அவர் வசித்து வந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.