அட்லீ இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களிலில் நடித்த படம் மெர்சல் . அதில் ஒரு ரோல்,மேஜிக் கலைஞர் ரோல் . அந்த ரோலுக்காக விஜய்க்கு சர்வதேச அளவில் பிரபலமான மேஜிக் கலைஞர் ஒருவர் பயிற்சி கொடுத்துள்ளார்
இந்நிலையில் மேஜிக் கலைஞர் தேனாண்டாள் நிறுவனம் இதுவரை என் சம்பளத்தை தரவில்லை என கோபமாக பேசி ஓர் விடீயோவை வெளியிட்டுள்ளார்.
அதில் மெர்சல் படத்திற்கான சம்பளம் பாக்கி உள்ளது .இன்னும் 4 லட்சம் சம்பள பாக்கி உள்ள நிலையில், பலமுறை கேட்டும் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை . தேனாண்டாள் நிறுவனம் பண நெருக்கடியில் உள்ளது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது .சமீபத்தில் தான் ஹேமா ருக்மணி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு மிகப்பெரிய ஷோரூமில் பர்சேஸ் செய்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார் என கூறியுள்ளார் .
மேலும் சில மாதங்கள் முன்பு கனடாவில் இருந்து சென்னை வந்து வழக்கறிஞர் மூலம் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன்” எனவும் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]