குவஹாத்தி: சட்டவிரோத குடியேறிகளை வடகிழக்கு மாநிலங்களிலிருந்து திருப்பி அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும் என்ஆர்சி(குடிமக்களுக்கான தேசிய பதிவு) யை, அஸ்ஸாமிய சமூகத்திற்கான சிவப்புக் கடிதமாக கருத முடியாது என்று தெரிவித்துள்ளார் அம்மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.
அதேசமயம், சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் இந்தப் பட்டியலின் மீது தான் குறைந்தளவு நம்பிக்கையே வைத்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.
கடைசி அஸ்ஸாம் குடிமக்கள் பட்டியலில், 19 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் விடுபட்டிருக்கிறார்கள் மற்றும் 3.11 கோடி மக்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
என்ஆர்சி -யின் தற்போதைய வடிவத்தில் நாங்கள் நம்பிக்கை இழந்துள்ளோம். பல இந்தியர்கள் இப்பட்டியலில் விடுபட்டிருக்கையில், இதை அஸ்ஸாம் சமூகத்திற்கான சிகப்பு கடிதம் என்று எவ்வாறு வகைப்படுத்த முடியும்” என்று கேட்டுள்ளார் அமைச்சர்.
“இந்த என்ஆர்சி -யில் பல குறைபாடுகள் உள்ளன. ஒவ்வொரு இடத்திலும் ஒரு குறிப்பிட்ட கணக்கை காட்டுகிறது. இந்த என்ஆர்சி என்பது காலிறுதிப் போட்டியோ, அரையிறுதிப் போட்டியோ அல்லது இறுதிப் போட்டியோ அல்ல. பாரதீய ஜனதாவின் ஆட்சியில் பல இறுதிப் போட்டிகளை நீங்கள் பார்ப்பீர்கள்” என்று மேலும் கூறினார்.