டில்லி:
நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், பிரபல பொருளாதார மேதையும், சர்ச்சைக்குரியவரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணியச்மி, தற்போதைய ஆட்சியாளர்களிடம் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றும் திறன் இல்லை மோடியின் அமைச்சரவை சகாக்களை பகிரங்கமாக சாடியுள்ளார். இது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூலை 5ந்தேதி நிதிஅமைச்சர் நிர்மலா தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில், 2014-ல் 1.85 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்திய பொருளாதாரம், இந்நிதியாண்டில் 3 டிரில்லியன் டாலராக உயரும் எனத் தெரிவித்த நிர்மலா சீதாராமன் அடுத்த சில ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வல்லரசாக மாறும் அதாவது 350 லட்சம் கோடியுடன் பொருளாதார நாடாக மாறும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
பட்ஜெட்டைத் தொடர்ந்து, நாட்டின் பொருதாரம் கடுமையான சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது தொடர்பாக பொருளதார வல்லுநர்கள், தொழிலதிபர்கள் மோடி அரசுக்கு அபாய சங்கு ஊதி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதிஅமைச்சர் நிர்மலா, சில அறிவிப்பு களை வெளியிட்டார்.
இந்த நிலையில், பொருளாதார மற்றும் புள்ளியியல் வல்லுநரும், இந்திய அரசியல்வாதியான டாக்டர். சுப்ரமணியன்சாமி, நாட்டின் பொருளாதாரம் குறித்து டிவிட் பதிவிட்டு உள்ளார்.
அதில், புதிய பொருளாதாரக் கொள்கை எதுவும் வரவில்லை என்றால் 5 டிரில்லியன் டாலருக்கு விடைபெறத் தயாராகுங்கள். தைரியத்தினால் அல்லது அறிவால் மட்டுமே பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற முடியாது. இதற்கு இரண்டும் தேவை. இன்று அது நம்மிடம் இல்லை. என்று காட்டமாக பதிவிட்டு உள்ளார்.
ஏற்கனவே சாமி, பிரதமர் மோடிக்கு பொருளாதாரம்பற்றி எதுவும் தெரியாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்க
1. தனிநபர் வருமான வரியை ஒழிக்க வேண்டும்
2. முதன்மை கடன் விகிதத்தை 9% ஆகக் குறைத்தல்
3. வங்கி கால வைப்பு வீதத்தை 9% ஆக உயர்த்துவது
4. நிறுவன ஊழியர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு வரி விலக்கு
5. உள்கட்டமைப்பை வலுப்படுத்த தாராள நிதி.
போனற டிப்ஸ்களையும் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய மோடி தலைமையிலான ஆட்சி மீதும், குறிப்பாக நிதிஅமைச்சர் மீதும் சுப்பிரமணியன் சுவாமி நேரடியாக கூறி வரும் குற்றச்சாட்டுக்கள் பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.