மும்பை:

பீமா கொரேகான் கலவர வழக்கு தொடர்பான விசாரணையின்போது, “War and peace” புத்தகம் தொடர்பான நீதிபதி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்து குறித்து மும்பை உயர்நீதி மன்ற நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பீமா கொரேகான் கலவரத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டளர்கள் மீதான ஜாமின்  மனு விசாரணை நேற்று மும்பை உயர்நீதி மன்றத்தில் தனி நீதிபதியின் முன்பு நடைபெற்றது. அப்போது,  காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில்,  சமூக ஆர்வலர் ஒருவரிடம் இருந்து லியோ டால்ஸ்டாயின் “போர் மற்றும் அமைதி”  (war and peace)  உள்பட பல நூல்கள் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தனிநீதிபதி, ரங் கோட்வால்  “போர் மற்றும் அமைதி” என்ற புத்தகத்தை,    “ஆட்சேபனைக்குரிய பொருள்”  என்றும், இதை ஏன் வீட்டில் வைத்திருந்தார் என்பதை விளக்கு மாறு மும்பை நீதிமன்ற நீதிபதி  கேட்டுக்கொண்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏற்கனவே,  இதே புத்தகத்தை பிரதமர் மோடி படிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு, நீதிபதியின் கூற்றுப்படி மோடியும் பிரவினைவாதியா என கேள்வி எழுப்பப் பட்டது.

இந்த விவரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  சம்பந்தப்பட்ட மும்பை உயர்நீதி மன்ற நீதிபதி ரங்கோட்வால், விளக்கம் அளித்துள்ளார்.

அதில்,  “போரும் அமைதியும் டால்ஸ்டாய் எழுதிய கிளாசிக் நாவல்  என்பது எனக்கு தெரியும். ஆனால், வழக்கின்  குற்றப்பத்திரிக்கையுடன் இது தொடர்பான அறிக்கை இணைக்கப்பட்டதை நான் படித்துப் பார்த்தேன். அதில், கையெழுத்து மிகவும் மோசமாக இருந்ததாகவும், போரும் அமைதியும் என்ற புத்தகம் பற்றி தனக்கு  தெரியும் என்று விளக்கம் அளித்துள்ளவர், குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் இருந்து  கைப்பற்றப்பட்ட புத்தங்களெல்லாம் குற்றம் இழைக்கத் தூண்டுபவை என்று நான் குறிப்பிடவில்லை” என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.