மும்பை

பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான ஊர்மிளா மடோன்கர் காஷ்மீரில் உள்ள தனது புகுந்த வீட்டாருடன் 22 நாட்களாகப் பேசவில்லை என தெரிவித்துள்ளார்.

விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு  அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டது,  மாநிலம் இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.   அதையொட்டி மாநிலம் முழுவதும் தொலைத் தொடர்பு மற்றும் இணையம் முடக்கப்பட்டது.   இதனால் பலருக்கு காஷ்மீரில் உள்ள தங்கள் உறவினரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

கணவருடன் ஊர்மிளா

 

பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான  ஊர்மிளா மடோன்கர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஆவார்.  இவர் காஷ்மீர் மாநிலத்தவரை மணந்துக் கொண்டுள்ளார்.  இவர் கடந்த 22 நாட்களாகத் தனது புகுந்த வீட்டாருடன் பேச முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 

ஊர்மிளா, “இது விதி எண் 370 விலக்கப்பட்ட பிரச்சினை மட்டுமின்றி மனிதாபிமான பிரச்சினையும் ஆகும்.  எனது மாமனார், மாமியார் இருவரும்  காஷ்மீரில் உள்ளனர்.  இருவருக்கும் நீரிழிவு மற்றும்  உயர் இரத்த அழுத்தம் உள்ளது.  அவர்களிடம் நானும் என் கணவரும் 22 நாட்களாகப் பேசாமல்  உள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.