[embedyt] https://www.youtube.com/watch?v=sNrtR_wvBdE[/embedyt]
சுஜீத் இயக்கி பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்டமான திரைப்படம் சாஹோ.
யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்கின்றனர். மதி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
பிரபாஸ் ஜோடியாக பாலிவுட் நாயகி ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்திலிருந்து “உண்மை எது, பொய் எது” பாடல் வெளியாகியுள்ளது .