ஆண்டிகுவா
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆண்டிகுவாவில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 297 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ரகானே 91 ரன்கள் எடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 222 ரன்களில் ஆட்டமிழந்தது இந்திய வீரர் இஷாந்த் சர்மா5 விக்கட்டுகள் எடுத்தார்.
அடுத்து இரண்டாம் இன்னிங்சில் இந்தியா 75 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தைத் தொடங்கியது. அணித்தலவர் விராட் கோலி 551 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ரகானே மர்றும் ஹனுமா விகாரி ஜோடி விளையாடத் தொடங்கியது. இந்த இன்னிங்சில் ரகானே தனது 10 ஆம் சதத்தை அடித்தார். ஆனால் விகாரி 93 ரன்களில் ஆட்டமிழந்து தனது சதத்தை 7 ரன்களில் தவற விட்டார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 7 விக்கட்டுகளை இழந்து 343 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
மேற்கிந்திய அணி 419 ரன்கள் வெற்றி இலக்குடன் களத்தில் இறங்கியது. ஆனால் பிராத் வெயில் 1 ரன், ஜான் சேப்பல் 7 ரன், பூரூக்ஸ்,, டோன் பிரேவோ, ஷாம் ஹோப் ஆகியோர் தலா 2 ரன்களும் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் 8 ரன்களும் மட்டுமே எடுத்தனர். இந்திய அணியில் சார்பில் ஆந்து வீசிய பும்ரா 7 ரன்கள் மட்டுமே அளித்து 5 விக்கட்டுகளை வீழ்த்தினார். மேற்கிந்திய அணி 26.5 ஓவர்களில் 100 ரன்களுக்கு அனத்து விக்கட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி 318 ரன்கள் விக்கட்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு இரண்டாம் இன்னிங்சில் ரகானே எடுத்த ரன்களும், பும்ரா வீழ்த்திய விக்கட்டுகளுமே காரணம் என ரசிகர்கள் புகழ்மாலை சூட்டி வருகின்றனர். இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இந்தியா 1 : 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.