அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக, வெப்பத்தின் தாக்கம் குறையும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரீரு பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 5 செ.மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ள” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.