மணப்பாறை அருகே 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ராஜாப்பட்டியில் கோபால கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் 32 அடி உயரத்திலான ஆஞ்சநேயர் பிரமாண்ட சிலை நிறுவனப்பட்டுள்ளது. அந்த ஆஞ்சநேயர் சிலைக்கான கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதற்கான பல்வேறு வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் புனித நீர் எடுத்துச் சென்று ஆஞ்சநேயர் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக ஆஞ்சநேயருக்கு சந்தனம், பால் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. கோகுலாஷ்டமியை முன்னிட்டு புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆஞ்சநேயருக்கான கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.