சென்னை:

னிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சல்பர் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.  இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அமில மழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே உலக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்  இந்தியாவிற்கு மேலே வளிமண்டலத்தில் சல்பர்டை ஆக்சைடு என்னும் விஷவாயு அதிகரித்து வருவதாக கடந்த 2015ம் ஆண்டே எச்சரிக்கை செய்தனர்.   சல்பர் டை ஆக்சைடு. என்ற அபாயகரமான விஷ வாயு இந்தியாவுக்கு மேலே பூமியின் வளிமண்டலத்தில் காணப்படுவதாகவும், இது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்றும், இந்த வாயு நீராவியுடன் சேர்ந்தால் அமில மழை கொட்டும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், தற்போதைய ஆய்வுகளும், சல்பர் டை ஆக்சைடு குறித்து எச்சரிக்கை தெரிவித்து உள்ளன. இதன் காரணமாக ‘ சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும், சல்பர் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுவதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், இந்திய நகரங்களில் சென்னை முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

நிலக்கரி, எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள் எரிக்கப்படுவதால் உருவாகும் சல்பர் டை ஆக்சைடு இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில்தான் அதிகமாக இருப்பதாகவும், ஆண்டுக்கு 751 கிலோ டன் சல்பர் டை ஆக்சைடு வாயு வெளியேற்றப்படுகிறது என்று அச்சுறுத்தி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஒடிசாவில் 648 கிலோ டன், குஜராத்தில் 596 கிலோ டன் சல்பர் டை ஆக்சைடு வாயு வெளியேற்றப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றுவதில் நாட்டிலேயே சென்னை முதலிடத்திலும், உலகிலேயே 29வது இடத்திலும் இருப்பதாகவும், சென்னையில் ஆண்டுக்கு 215 கிலோ டன் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றப்படுவதாகவும் தெரிவித்து உள்ளது.

இதற்கு முக்கிய காரணம், வட சென்னை அனல்மின் நிலையம் மற்றும் வட சென்னை பகுதிகளில் உள்ள ரசாயண தொழிற்சாலைகள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த  சல்பர் டை ஆக்சைடு காற்றில் கலப்பதால், அதை சுவாசிப்பவர்களுக்கு ஆஸ்துமா உஉள்பட சுவாசம் பந்தமான நோய்கள் உண்டாகும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

மேலும், சென்னையில் அமில மழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும், சர்வதேச கந்தக டை ஆக்ஸைடு பாதிப்பு குறித்து ஆய்வு நடத்திய  அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.