டில்லி:
அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை சூழ்நிலைக்கு ஏற்ப மாறலாம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராஜ்நாத்சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று, பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்த இடத்தைப் பார்வையிட்ட மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இன்று ஆகஸ்ட் 16, 2019 மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினமாகும். அவரது ஆட்சியில்தான் 1998-ம் ஆண்டு அணு ஆயுதச் சோதனை பொக்ரானில் மேற்கொள்ளப்பட்டது.
“வாஜ்பாயின் திடமான உறுதியினால் பொக்ரான் சோதனைதான் இந்தியாவை அணு ஆயுதச் சக்தியாக மாற்றியதன் பகுதியாகவும் அதே வேளையில் ‘முதலில் பயன்படுத்தக் கூடாது’ என்ற இந்தியக் கொள்கையின் அடையாளமாகவும் திகழ்கிறது.
ஆனால், இந்தியாவின் ‘முதலில் பயன்படுத்த மாட்டோம்’ (No First Use-NFU) என்ற அணுக்கொள்கையின் எதிர்காலம் ‘சூழ்நிலைகளை’ பொறுத்து மாற வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
இந்தியா இந்தக் கொள்கையை கண்டிப்புடன் கடைபிடித்து வருவதாக கூறிய அமைச்சர், எதிர்காலங்களில் என்ன நடக்கும் என்பது சூழ்நிலைகளைப் பொறுத்தது என்று கூறி உள்ளார்.
ரஷ்ய ராணுவ அமைச்சகம் நடத்திய 5வது ராணுவ ஸ்கவுட் மாஸ்டர்ஸ் சர்வதேச ராணுவ விளையாட்டுப் போட்டிகளில் 8 நாடுகள் கலந்துகொண்டன. இதில் இந்திய ராணுவம் வெற்றி பெற்ற நிலையில், அதன் நிறைவு விழா நிகழ்ச்சிக்காக ஜெய்சால்மர் ராணுவ நிலையத்திற்குச் செல்லும் வழியில் பொக்ரானுக்குச் சென்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.