மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ‘கோச்’ தேர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில், இன்று இரவு அணியின் பயிற்சியாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் நடப்பாண்டு உலக கோப்பை போட்டியில் வெற்றிவாய்ப்பை நழுவ விட்ட நிலையில், தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில ஆடி வருகிறது. இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கோச் ரவி சாஸ்திரி உள்பட பல பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளர்கள் தேவை என பிசிசிஐ விளம்பரம் வெளியிட்டது.

அதன்படி பல நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள், இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு இன்று அவர்களிடம் இன்டர்வியூ நடைபெற்று வருகிறது.
களத்தில் உள்ள வீரர்கள்
நியூசிலாந்து வீரர் மைக் ஹெவ்ஸன்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் டாம் மூடி
வெஸ்ட்டி இன்டிஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் பில் சிம்மன்ஸ்
முன்னாள் வீரர் ராபின் சிங்
2007ம் ஆண்டு உலக டி 20 வென்ற அணியின் மேலாளர் லால்சந்த் ராஜ்புத்
ரவி சாஸ்திரி
இவர்களிடையே இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது. முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழுவினர் 6 பேரையும் நேர்காணல் செய்து வருகின்றனர்.
இவர்களில் ரவி சாஸ்திரியே முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ரவி சாஸ்திரியே மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படு கிறது. ரவிசாஸ்திரிதான் பயிற்சியாளராக வேண்டும் என்று கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும் வற்புறுத்தி வரும் நிலையில், ரவி சாஸ்திரியே தனது பதவியை தக்கவைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]