First Microfinance Bank OF Pakistan website is now Hacked by Indian Hacker @Ne0Sec & Team.
பாகிஸ்தானை சேர்ந்த முதல் சிறு கடன் நிதி நிறுவனத்தை (மைக்ரோ ஃபைனான்ஸ்) இந்தியாவை சேர்ந்த இணையதள ஹாக்கர்கள் முடக்கி உள்ளனர்.
இன்றைய உலகம் இணையங்களை நம்பியே சுழன்றுகொண்டிருக்கிறது. அனைத்து வகையான பணப் பரிவர்த்தனைகளும் இணையதளங்களின் உதவியுடனே யே நடைபெற்று வருகின்றன. அதேவேளையில், இணையதள சேவைகளை முடக்கும் ஹேக்கர்களின் கைவரிசையும் உலக அளவில் அதிகரித்து வருகிறது.
இணைய பாதுகாப்பு குறைவு காரணமாக சமீபத்தில் இந்தியாவில் உள்ள 32 லட்சம் ஏ.டி.எம் கார்டுகளின் பின் நம்பர்களை வெளிநாட்டைச் சேர்ந்த ஹேக்கர்கள் திருடியதும், பல பாஜக இணையதளம் உள்பட அரசு இணையதளங்கள், முக்கிய பிரமுகர்களின் மின்னஞ்சல்கள் முடக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறு கடன் நிதி நிறுவனம் (மைக்ரோ பைனான்ஸ்) ஒன்றின் இணையதளத்தை முதன்முதலாக இந்தியாவை சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர். அந்த இணையதளத்தில் இந்தியாவின் மூவர்ண கொடியை பதிவிட்டு உள்ளனர்.
அத்துடன் Hacked by Ne0Sec & Team என்றும், ஜெய் ஹிந்த் என்றும் பதிவிட்டு உள்ளனர்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.