டெஹ்ராடூன்:

பிரதமர் மோடியைக் கொண்ட ‘மேன் Vs வைல்டு’ எபிசோட் படமாக்கப்பட்ட இடமான கார்பெட் தேசிய பூங்காவுக்கு டிஸ்கரி சேனல் ரூ .1.26 லட்சம் வழங்கி உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமாக பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற நேரத்தில், பிரதமர் மோடி, மேன் Vs வைல்ட்’  என்ற ஆவணப் படத்தில் நடித்து வந்தார். இந்த ஆவணப்படம் டிஸ்கவரி சேனலில்  ஒளிப்பரப்பப்பட உள்ளது.

இந்த படப்பிடிப்பிற்காக கடந்த  பிப்ரவரி மாதம் 14ம் தேதி காலை 7 மணிக்கு விமானம் மூலம் உத்தரகாண்ட் சென்ற மோடி ஜிம் கார்பெட் தேசிய பூங்காவை அடைந்துள்ளார். அதன்பிறகு ஆவணப்படத்திற்கான படப்பிடிப்பு மோடியை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

அதே நாளில் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவடத்தில் தற்கொலைப்படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இது நாடெங்கிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் உத்ராகாண்ட்டில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் ஈடுபட்டது விமர்சனத்திற்கு வழிவகுத்துள்ளது.

இந்த நிலையில், Man vs Wild நிகழ்ச்சியில் தன்னுடன் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் அடுத்த மாதம் 18ந்தேதி வெளியாகும் என்று என்று பியர் கிரில்ஸ் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில், டிஸ்கவரி சேனலில் இருந்து ஜிம் கார்பெட் ரூ .1.26 லட்சம் சம்பாதித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பூங்காவின் பல்வேறு கரடுமுரடான இடங்களுக்கு குழுவினர்  சென்று படப்பிடிப்பு நடத்துவதாக வும், இதற்காக அவர்களிடம் நுழைவுக் கட்டணம் மற்றும் கட்டணம் வசூலித்தோம். தங்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு என்றும் பூங்கா இயக்குனர் தெரிவித்து உள்ளார்.