மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 3வது அலகில் பழுது காரணமாக பராமரிப்பு பணி நடைபெறுவதால், 45 நாட்களுக்கு மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
இந்நிலையில், முதல் பிரிவின் 3வது அலகில் நேற்று பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 45 நாட்களுக்கு பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, மின் உற்பத்தி மீண்டும் பழைய படி தொடங்கும் என மேட்டூர் அனல் மின் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.