சென்னை:

ந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தபால்துறை தேர்வுக்கு எதிராக வழக்கு தாக்கல் பட்ட நிலையில், மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்த மத்திய அரசு, சமீபத்தில் நடந்த  தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பாணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.

அஞ்சல்துறை பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஆங்கிலம் அல்லது அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படும் என கடந்த மே மாதம் மத்திய அறிவித்த நிலையில், கடந்த ஜூன் மாதம், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே அஞ்சல் துறை தேர்வுகள்  நடத்தப்படும் மத்தியஅரசு மாற்றி அறிவித்து, தேர்வையும் நடத்தி முடித்து.

மத்திய அரசின் இந்த மாறுபட்ட உத்தரவை எதிர்த்து,  தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது,  அஞ்சல் துறை தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்கும் மே 10ம் தேதி அறிவிப்பே தொடரும் என கடந்த 23-ஆம் தேதி மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை புதிய அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாகக் கூறி அதன் நகலை மத்திய அரசு வழக்கறிஞர்  தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைப்பதாக கூறினர்.