டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 113வது பிறந்த தினம் இன்று. இதையொட்டி, பிரபல வலைதளமான கூகுள், டூடுல் வெளியிட்டு அவரை கவுரவித்து உள்ளது.
டாக்டர் முத்துலட்சுமி பெயரில் மகப்பேறு நிதிஉதவித் திட்டத்தை தமிழக அரசு கவுரம் செய்து வரும் நிலையில், கூகுள் அவரது பிறந்த நாளை நினைவுகூர்ந்து டூடுள் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.
சென்னையில் அமைக்கப்பட்ட மருத்துவக்கல்லூரியான, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த முதல் மாணவி என்ற பெருமைக்கு உரியவர் முத்துலட்சுமி ரெட்டி. அதுபோல, அரசு மருத்துவமனையில் பணி செய்த முதல் பெண் மருத்துவர், பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் இப்படி வரலாற்றில் பல சாதனைக்கு சொந்தக்காரர் முத்துலட்சுமி ரெட்டி
இன்று 133வது பிறந்த தினம். இதையொட்டி, கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில், பெங்களூருவைச் சேர்ந்த ஓவியர் அர்ச்சனா சீனிவாசன் வரைந்துள்ள ஓவியத்தை பதிவிட்டு உள்ளது.
இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ள கூகுள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தனது வாழ்நாள் முழுவதும் பல தடைகளை உடைத்து பொது சுகாதாரத்துக்காகவும், பாலின பாகுபாடுக்கு எதிரான போராட்டத்திலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவர் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை குறிப்பாக இளம் சிறுமிகளின் வாழ்க்கையை மாற்றி யமைத்து ஒரு புதிய பாதை வகுப்பவராக இருந்தார்” என்று புகழாரம் சூட்டியுள்ளது.