பெங்களூரு:

ர்நாடக சட்டமன்றத்தில் மொத்தம் 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில்,  நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெறுவதி உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை சட்டமன்றக் கட்சித்தலைவர் சித்தராமையா கூட்டி உள்ளார்.

கர்நாடக மாநிலத்தை  குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி அரசு  14 மாதங்கள் ஆட்சி செய்து வந்த நிலையில், அதிகார போதை காரணமாக  சில காங்கிரஸ் , ஜேடிஎஸ் எம்எல்ஏக்களால், ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

இதையடுத்து, இதையடுத்து 105 உறுப்பினர்களுடன் பாஜக தலைவர் பிஎஸ்.எடியூரப்பா 4-வது முறை யாக கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார். இன்று  சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார்.

இந்த பரபரப்பான  சூழலில் ஏற்கனவே 3 எம்எல்ஏக்களை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்திருந்த நிலையில், மேலும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 11 பேர், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் 3  பேரையும் சேர்த்தும் மொத்தம் 14 பேரை  தகுதிநீக்கம் செய்து அதிரடியாக அறிவித்தார். இதன்படி, மொத்தம் 17 எம்எல்ஏக்கள் ரகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், இன்று எடியூரப்பா நம்பிக்கை வாக்கு கோருகிறார்.

கர்நாடக சட்டமன்றத்தில்  மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 224. இதில் 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், தற்போதைய எண்ணிக்கை 207 ஆகக் குறைந்துள்ளது. பெரும்பான்மைக்கு 104 உறுப்பினர்கள் தேவை எனும் நிலையில், எடியூரப்பாவுக்கு 105 பாஜக எம்எல்ஏக்களும், ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆதரவும் இருக்கிறது.

இதனால் எடியூரப்பா பெரும்பான்மை  நிரூபிப்பதில் எந்தவிதமான சிரமும் இல்லை. அவர் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டம் விதான சவுதாவில் தொடங்கியது. சி.எல்.பி தலைவர் சித்தராமையா, கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி (கே.பி.சி.சி) தலைவர் தினேஷ் குண்டு ராவ், கே.ஜே.ஜார்ஜ், பிரியங்க் கார்கே, எம்.பி. பாட்டீல், ஈஸ்வர் காண்ட்ரே மற்றும் பிற காங்கிரஸ் எம்.எல்.ஏ. (டி.என்.எஸ்)க்கள் கலந்து கொண்டனர். இதில் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வது தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.