சென்னை:
செக் மோசடி வழக்கில் 2 வருடம் தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசுவின் தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது.
காசோலை மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசுவுக்கு கடந்த ஆண்டு நீதி மன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவரது சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது, அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை சரியே என்று சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக, அன்பரசு சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.
கடந்த 2002ம் ஆண்ட தனது, கல்வி நிறுவனத்தின் கட்டிடப் பணிகளுக்காக சவுகார்பேட்டையைச் சேர்ந்த முகுந்சந்த் போத்ரா என்பவரிடம் ரூ. 35 லட்சத்தை அன்பரசு கடனாக வாங்கினார். ஆனால், அதை திருப்பி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பியது.
இதையடுத்து, அன்பரசு உள்ளிட்டோர் மீது முகுந்த்சந்த் போத்ரா செக் மோசடி வழக்கு தொடர்ந் தார். வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் 8வது பெருநகர மாஜிஸ்திரேட், அன்பரசு, மணி, கமலா ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.