நெல்லை:

நெல்லை மாநகராட்சியின்முன்னாள்  மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வேலைக்காரப் பெண் ஆகியோர்  மிகக்  கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.

திமுகவை சேர்ந்த உமா மகேஸ்வரி கடந்த 1996ம் ஆண்டு நெல்லை மேயராக பதவி வகித்தவர். இவரது வீடு நெல்லை அருகே உள்ள ரெட்டியார் பட்டியில் உள்ளது. அவரது வீட்டுக்குள் இன்று மாலை புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த மகேஸ்வரி, அவரது கணவர், வீட்டு வேலைக்கார பெண் ஆகிய 3 பேரையுமே கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்து உள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடடினயாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்க்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பயங்கர கொலைக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. உமா மகேஸ்வரி கொலை காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

சம்பவம் குறித்து அறிந்ததும் நெல்லை மாநகர காவல்ஆணையர் பாஸ்கரன், மற்றும் மேலப்பாளையம் போலீசார் சென்று நேரடி விசாரணை நடத்தினர். . நகைக்காக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடனடியாக மோப்ப நாய் கொலை நடந்த வீட்டுக்கு வரவழைக்கப்பட்டது.  மோப்பம் பிடித்த நாய் வீட்டை விட்டு வெளியே ஓடிச்சென்று நின்று விட்டது. இதன் காரணமாக கொலையாளிகள் திட்டம்போட்டு வாகனங்களில் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

[youtube-feed feed=1]