சந்தானம் நடித்துள்ள ‘ஏ 1’ படம் ஜூலை 26-ம் தேதி வெளியாகிறது.
ஜான்சன்,இயக்கும் இப்படத்தில் ராஜேந்திரன், சுவாமிநாதன், மனோகர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லியோ ஜான் பால் எடிட் செய்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. இந்நிலையில் இப்படம் ஜூலை 26-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானம் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.