நாயகன் அன்பாக பேசுவதும், அக்கறை காட்டுவதும் நாயகிக்கு அவன் மேல் ஒரு
வித அனுதாபத்தை உண்டு பண்ணுகிறது. எல்லோரும் பலவீனங்கள் உள்ள
சராசரி மனிதர்கள் தான். தன் லட்சியத்திற்கு போராடும் அவனும் சராசரி மனிதன்
தானே !
சராசரி உணர்வுகள் அவனுக்குள்ளும் இருக்கும் தானே !
வயதும், வாய்ப்பும் ஒருவேளை தப்பாக வழிநடத்தலாம்.
ஒரு நல்ல தோழியாக நாயகனுக்கு எடுத்து சொல்கிறாள். Msg ல ( நோட்
பண்ணுங்க msg )
free யா ? busy ah ?
சொல்லு loosu…
சொல்றேன்னு தப்பா நினைகாத
இல்ல சொல்லு
சிக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ சுதாவ. எல்லாருக்கும் லட்சியம் உண்டு
அதுக்கு கல்யாணம் பண்ணியும் போராடமுடியும். சினிமா நிறைய பேரை வாழ
வச்சிருக்கு, நிறைய பேர் வாழ்க்கையை தொலச்சும் இருக்காங்க அதுக்கு
உதாரணமே எங்க குடும்பம் தான். எங்க அப்பாவை பத்தி சொல்லியிருக்கேன். Pls
உன்னோட தன்னம்பிக்கையை குலைக்கிறேனு தப்பா நினைக்காதே
அக்கறையில் தான் பேசுறேன்.
தெரியும் லூசு எனக்கு…
உன்னோட திறமைக்கு நிச்சயம் நீ சாதிப்ப எனக்கு தெரியும்.ஆனா உன்னோட
வாழ்கையும் முக்கியம். இதை சொல்லும் உரிமை எனக்கு இருக்கானு தெரியல
மனசில் தோணுச்சு சொல்லிட்டேன். தப்பா எதுவும் பேசி இருந்தா மன்னிச்சிடு
இல்ல லூசு. உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.
Thanks…
சாப்டியா லூசு
ம்…
மனதின் எண்ணங்களை எழுத்துகளில் கொட்டிவிட்டதும் அதை நாயகன் செவி
கொடுத்து கேட்டதும் அவளுக்குள் ஒரு நிறைவை தந்தது. பேசும்போது கூட
தடுமாறும் நாயகிக்கு எழுதும் போது ஆத்மார்தமாய் உணர்வுகளை அப்படியே
சொல்லிவிட முடிந்தது. இந்த நட்பு இன்னும் உயிர்ப்போடு இருக்க காரணமே
ஆத்மார்த்தமாக அவளால் எழுதமுடிந்ததும், நாயகனை தன் ஆன்மாவாக அவள்
நினைத்ததும் தானே. இதற்கு முன் நடந்த கசப்பான அனுபவங்களை எல்லாம்
மறந்து நல்ல நட்போடு பயணிக்க
எவ்வளவு நெருக்கமாக பேசினாலும் தன்னைவிட நாயகிக்கு முக்கியத்துவம்
கொடுப்பது ஸ்ரீ குள் ஒரு வித தாக்கத்தை உண்டு பண்ண நேரடியாக நாயகியிடம்
தன் ஆதங்கத்தை சொல்லிவிடுகிறாள்.
அது உன்ன தான் ரொம்ப miss பண்ணுது.
சும்மா சொல்லாத நீ miss you msg பண்ணின உடனே me too சொல்லுதே அப்பறம்
என்ன…
அது ஏதோ விளையாட்ட சொல்லுது
ஸ்ரீ யின் உணர்வுகள் நன்றாக உணரும் நாயகி மூவருக்குள் இருக்கும் நட்பு
கெடாமல் இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள். அடுத்த சந்திப்பில் இரண்டாக
பிரியும் ஒரே உணர்வை சொல்லும் கீசெயின் ஒன்றை வாங்கும் ஸ்ரீ ஒரு பாதியை
நாயகனிடமும் ஒன்று தானும் எடுத்துகொள்ள மெல்லிய புன்னகையோடு
வேடிக்கை பார்க்கிறாள் நாயகி. (யாரும் குழந்தை இல்லை என்ன செய்கிறோம்
என்று தெரிந்தே செய்யும் போது. யாரின் சொந்த விசயத்தில் தலையிட
விரும்பவில்லை நாயகி ) நாயகி ரியல் எஸ்டேட் பிசினசில் இருந்ததால் தன்
தோழி ஒருவர் அதே தொழிலில் இருப்பதாகவும் ரெண்டு பேரும் சேர்ந்து பணி
புரிய முடியுமா ன்னு நாயகன் கேட்க உன்னோட frd தானே ஓகே ன்னு
சொல்கிறாள் நாயகி.