ன்றைய நவீன யுகத்தில் மக்களை அச்சுறுத்தி வரும் முக்கிய நோய்களில் நீரிழிவு நோய் முக்கி பயங்காற்றி வருகிறது.  நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததே மிக வேகமாக  நோய் பரவி வருவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நோய் வருவதற்கு பல  காரணங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில், இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது போன்ற காரணங்களும், நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவில்தான் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.


முக்கிய விபரங்கள்

இந்தியாவில் 2ல் ஒருவருக்கு அவர்களின் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயின் தாக்கம் பற்றி தெரியவில்லை

உலக அளவில் 2017 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 7.29 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

 நீரிழிவு நோயாளிகளில்  மூன்றில் ஒரு பங்கு சிறுநீரக நோயாக வளர்ச்சி பெறும்

அதிகமான மருத்துவ செலவுகளால் 5.5 கோடி இந்தியர்கள் வறுமை நிலைக்கு செல்கிறார்கள்

தமிழகத்தில்  22 லட்சம் பேருக்கு  நீரிழிவு நோய்

 Public Health Foundation of India (PHFI), the Madras Diabetes Research Foundation (MDRF), மற்றும் இதர பொதுநலம் சார்ந்து இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள் இணைந்து, 2015-2016 நடைபெற்ற இந்திய குடும்ப நல  கணக்கெடுப்பு  ஆய்வு முடிவுகளை அலசி ஆராய்ந்ததில் இந்தியாவில் 2ல் ஒருவருக்கு அவர்களின் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயின் தாக்கம் பற்றி தெரியவில்லை என்ற அதிர்ச்சிகரமான முடிவுகளை தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய  நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டோரில் 47% பேருக்கு நோய்களின் தாக்கமும் தெரியவில்லை என்றும், 24% பேர் மட்டும் நோய்யை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் 15 முதல் 49 வயது உள்ளோர் வரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர், 6,47,451 பெண்களும், 1,01,668 ஆண்களும் அடக்கம். வரும் நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் தாய்மை மற்றும் குழந்தை நலமேம்பாட்டிற்கு மிக முக்கியமான முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக PHFI  ன் துணை பேராசிரியர் ஆசிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளர். வளர்ந்த நாடுளைப்பொன்று இரத்த சர்க்கரை அளவு, வாரந்திர பரிசோதனைகள் போன்றவற்றை நாமும் மேற்கொள்ளவேண்டும், நம்முடைய உடல் நலத்திற்கும் முக்கியத்தும் கொடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உலக அளவில் 2017 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 7.29 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்,  சீனாவில் 11.43 கோடி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உலகில் அதிக நிரிழிவு நோயாளிகளை பெற்ற நாடாக சீனா  முதலிடத்தில் விளங்குகிறத. ஆனால் இந்தியா அதிகரித்துவரும் நீரிழிவு நோயின் தாக்கத்தால் அடுத்த சில வருடங்களில் இந்தியா முதலிடம் பெற்றுவிடும் என்றும், 2045ம் ஆண்டு இந்தியாவில் 13.4 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள்  என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போதுள்ள நீரிழிவு நோயாளிகளில்  மூன்றில் ஒரு பங்கு சிறுநீரக நோயாக வளர்ச்சி பெறுறும் என்றும், இதற்கு மாற்றாக  டயாலிசிஸ் அல்லது சிறுநீர மாற்ற அறுவை சிகிச்சைதான் சரியான தீர்வு என்றாலும் என்று மோகன் கூறினார். “குறைந்தது 3முதல் 4 கோடி பேருக்கு சிறுநீர மாற்று சிகிச்சை எத்தனை பேர் முன் வந்து சிறு நீரகத்தினை கொடுப்பார்கள், அதற்கும் ஆகும் செலவு,   டயாலிசிஸ்க்கு ஒரு வருடத்திற்கு குறைந்தது ரூ 3 லட்சம் செலவாகும், பெரும்பாலான மக்கள் வறுமைகோட்டிற்கு கீழ்தான் உள்ளனர்.  இதையெல்லாம் நம் மக்கள் கவனத்தில் கொள்வதில்லை

அதிகம் பாதிக்கப்படும் கிராமப்புற மக்கள்

கிராமப்புறத்தில் குறைவான கல்வி மற்றும் குறைவான வருவாய் உள்ள ஆண்களுக்கு அதிக அளவில் நீரிழிவு  நோயின் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால் . பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவுக்கான வழக்கமான பரிசோதனையால் பெண்கள் சிறப்பாக சிகிச்சை மேற்கொண்டனர்.

கிராமப்புற ஏழைகளின் இந்த போக்கு, நீரிழிவால் விளையும் சிக்கல்களுக்கு உயர் தர கவனிப்பை மிகவும் குறைந்த அளவில்தான் பெற முடிகிறது ஏனெனில் அவர்களுக்கு அதிக மருத்துவ கட்டணத்தினை எப்படி செலுத்தமுடியும் என்ற கவலை அவர்களுக்கு உள்ளது என்று அந்த ஆய்வு கூறியுள்ளது. இவர்களில் பலர் பிழைப்பு நடத்தும் விவசாயிகள் என்பதால், தங்களது வாழ்வாதாரத்தைப் பெற அவர்களது உடல் நலனே மிக முக்கியம் என்பதில் நம்பிக்கை வைத்து இருந்தாலும்  நோய் மேலாண்மையில் முழுமையான ஈடுபடுவதில்லை என்பது கவலைக்குரியது

அதிகமான மருத்துவ செலவுகளால் 5.5 கோடி இந்தியர்கள் வறுமை நிலைக்கு செல்வதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது

சரி இந்த நீரிழிவு நோய் எந்த மாநிலக்காரர்கள் அறிந்துள்ளனர் என்றால் கேரள மாநிலத்தவர்கள் , ஏனெனினில் 10ல் 7 பேருக்கு நோயும், நோயின் தீவரமும் அவர்களுக்கு புரிகிறது, இரண்டாவது இடத்தில் கோவாவும், மூன்றாமிடத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகளும் உள்ளது. தமிழகமும் ஒரளவில் விழிப்புணர்வு செய்து வந்தாலும் இன்னமும் அதிகமான விழிப்புணர்வு மக்களிடையே தேவை.

தமிழகத்தில்  22 லட்சம் பேர் நீரிழிவு நோயுடன் வாழ்ந்துவருவதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது,

இந்த ஆய்வில் நீரிழிவு நோய் பெருக்கத்திற்கு காற்று மாசுபடுதலும் ஒரு காரணமாக இருக்கும் என்றும் தெரிவிக்கிறது. எனவே நாம் இருக்கும் இடத்தில் சுத்தமான காற்றைக்கொடுக்க மரங்களை மேலும் நட்டு, நீரினை முறையாக சேமித்து, நோயற்ற வாழ்வாக வாழ்வது நம் கையில்தான் இருக்கிறது

’நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

-செல்வமுரளி