நெல்லை:

ணவகத்தில் வாங்கப்பட்ட பார்சல் சாப்பாட்டுக்கான பில்லில்,  தயிர் பாக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி வரி மற்றும் பார்சல் செலவுக்கான தொகை  வசூலித்த தனியார் ஓட்டலுக்கு ரூ.  15 ஆயிரம் அபராதம் விதித்து  நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உணவுப்பொருளான தயிருக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. ஆனால், பாளையங்கோட்டையில் உள்ள பிரபலமான ஓட்டல் ஒன்றில் தயிருக்கு ஜிஎஸ்டி வரியாக ரூ.2ம், பார்சல் செலவு என ரூ.2ம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து, உணவு பார்சல் வாங்கிய நுகர்வோர், ஓட்டல் நிர்வாகத்திடம் முறையிடும், அவர்கள் தெனாவெட்டாக பதில் அளித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பார்சல் வாங்கிய நபர், திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்ற தலைவர் தேவதாஸ், உறுப்பினர்கள் சிவன்மூர்த்தி, முத்துலெட்சுமி ஆகியோர் மனுதாரரின்  மன உளைச்சலுக்காக ரூ.10 ஆயிரமும்,  வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ. 15 ஆயிரம் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும், அத்துடன்  கூடுதலாக வசூலிக்கப்பட்ட 4 ரூபாயையும் திருப்பி கொடுக்க வேண்டும் என்று அந்த உணவகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த அபராத தொகையை ஒரு மாதத்திற்குள் தொகையை வழங்காவிட்டால் 6 சதவீதம் வட்டி விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]