அகமதாபாத்
நேற்று நடந்த கால்பந்து போட்டியில் இரு கோல்கள் அடித்து இந்திய அணி தலைவர் சுனில் சேத்ரி சாதனை படைத்துள்ளார்.

அகமதாபாத் நகரில் நேற்று நடந்த கால்பந்து போட்டியில் இந்தியா மற்றும் தஜிகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 2-4 என்னும் கணக்கில் தோல்வியை தழுவியது. ஆயினும் இந்திய அணித் தலைவர் சுனில் சேத்ரி ஒரே போட்டியில் 2 கோல்களை அடித்துள்ளார். அத்துடன் அதிக கோல்களை அடித்த 2 ஆம் வீரர் எனவும் மீண்டும் சாதனை புரிந்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் போர்ச்சுகல் அணி வீரர் ரொனல்டோ 88 கோல்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இதற்கு முன்பு 68 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்த கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படும் லியோனெல் மெஸ்ஸியை பின் தள்ளி 70 கோல்களுடன் இந்தியாவின் அணித்தலைவர் சுனில் சேத்ரி இரண்டாம் இடத்துக்க்கு வந்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் மெஸ்ஸியை பின் தள்ளி சுனில் சேத்ரி இரண்டாம் இடத்தை பிடித்தார். ஆனால் அதன் பிர்கு மெஸ்ஸி வேறு சில போட்டிகளில் கோல் அடித்து இரண்டாம் இடத்துக்கு மீண்டும் முன்னேறினார். தற்போது 70 கோல்கள் அடித்து மீண்டும் இரண்டாம் இடத்துக்கு வந்து சுனில் சாதனை படைத்துள்ளார்.
[youtube-feed feed=1]