அதிரடியான, அதேசமயம் நல்ல ரன்களை குவிக்கும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லாமல் இந்தியா தடுமாறிவரும் நிலையில், ரவீந்திர ஜடேஜாவை அணிக்குள் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஆலோசனை கூறியுள்ளார் முன்னாள் இந்தியக் கேப்டன் அசாருதீன்.

இந்திய கிரிக்கெட்டில், 3 உலகக்கோப்பை போட்டிகளில் கேப்டனாக இருந்த ஒரே நபர் அசாருதீன் மட்டுமே. கடந்த 1992, 1996 மற்றும் 1999 ஆகிய மூன்று போட்டிகளில் அவர் அணிக்கு தலைமையேற்றார்.

அசாருதீன் கூறியதாவது, “ஜடேஜா அணியில் இடம்பெற்றால், நடுக்கள பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் மிகவும் உதவிகரமாக இருப்பார். வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்திலேயே அவர் இடம்பெற்றிருந்தால், மிகவும் உதவிகரமாக இருப்பார்.

மேலும், அவரின் ஃபீல்டிங் திறனும் அணிக்கு கை கொடுக்கும். தற்போதைய இங்கிலாந்து ஆடுகளங்களின் தன்மைக்கு ஜடேஜா பொருத்தமானவராக இருப்பார்” என்றுள்ளார்.

[youtube-feed feed=1]