டில்லி

த்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிலத்தடி நீரை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் பரிந்துரை செய்துள்ளது.

உலகில் உள்ள நாடுகளில் இந்தியா மிகவும் தண்ணீர் பஞ்சம் உள்ள நாடாகும். கடந்த 1951 ஆம் வருடம் ஓவ்வொருவருக்கும் ஒரு வருட சராசரி நீர் அளவு 5177 கன மீட்டராக இருந்தது. அதன் பிறகு அந்த அளவு 2011 ஆம் வருடம் 1545 கன மீட்டராக குறைந்துள்ளது. இது 70% அளவுக்கு குறைவாகும். ஐ நா இந்த அளவு 1700 கன மீட்டருக்கு கீழே இருந்தால் அது தண்ணீர் பஞ்சமுள்ள நாடு என அறிவித்துள்ளது.

இந்தியாவின் இந்நிலைக்கு முக்கிய காரணம் நீர் வளம் குறைந்ததே ஆகும். மக்களில் பலர் தற்போது நிலத்தடி நீரை நம்பி உள்ளதால் அந்த நீர் மட்டமும் மிகவும் குறைந்துள்ளது. இதை ஈடு கட்ட நிறைய பணம் தேவைப்படுகிறது. அதை ஒட்டி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிலத்தடி நீர் மட்டம் குறித்து ஆய்வு செய்தது. அத்துடன் இந்த நீர் மட்டத்தை உயர்த்தும் செலவு குறித்தும் ஆய்வு செய்தது.

தனது ஆய்வறிக்கைகையை வாரியம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு இந்த மாதம் ஒன்றாம் தேதி அன்று அளித்தது. அந்த அறிக்கையில் நிலத்தடி நீர் பயன்படுத்துவோருக்குரூ. 10000 முதல் ரூ. 100000 வரை அபராதம் விதிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அதிக அளவில் நீர் எடுக்கப்பட்டுள்ள இடங்களில் புதிய ஆழ்துளை கிணறுகள் தோண்ட தடை விதிக்க வேண்டும் எனவுக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்காக நிலத்தடி நீர் அளவை பொறுத்து அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி, ஓரளவு பாதிக்கபட்ட பகுதி மற்றும் பாதுகாப்பான நீர் பகுதி என பிரிக்கப்பட்டுள்ளது அத்துடன் பயன்படுத்துவோரும் மூன்று விதமாக பிரிகப்பட்டுள்ளனர். அவை தனி மனித பயன்பாடு, வியாபாரி, தொழிற்சாலைகள் என மூன்று விதமாகும். இதில் அந்தந்த நீர் பகுதிக்கு ஏற்ப அபராத தொகை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனி மனித பயன்பாட்டாளருக்கு ரூ. 10000 அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர பாதிக்கபட்ட மற்றும் ஓரளவு பாதிக்கபட்ட பகுதிகளில் இவர்கள் ஒரு நாளைக்கு நீர் எடுக்க ரூ.100 எனவும் பாதுகாப்பான நீர் பகுதிகளில் ஒரு நாளைக்கு ரூ 50 ம் அபராதம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதைப் போல வியாபாரி, தொழிற்சாலைகளுக்கும் தனித்தனியே அபராதத் தொகை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பல சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் நீர் வளத்தை அதிகரிக்காமல் இருக்கும் நீர் வளத்தை பயன்படுத்த அபராதம் விதிப்பது தவறானது என தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு மனு அளித்துள்ளனர். இதற்கு பதிலாக நிலத்தடி நீர் ம்ட்டத்தை உயர்த்துவோருக்கு உதவித் தொகை அளிக்கப்படும் என அறிவித்திருக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளனர்.