டில்லி
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா வந்தவுடன் பாஸ்போர்ட் மூலம் உடனடியாக ஆதார் அட்டை பெற முடியும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துளார்.
ஆதார் அட்டை அவசியமில்லை என கூறியபடியே மத்திய அரசு சிறிது சிறிதாக ஆதார் அவசியம் என ஆக்கி வருகிறது. இந்த வருடம் மே மாதம் 31 ஆம் தேதி கணக்கின் படி 123.82 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை பெற தற்போது 180 நாட்கள் காட்டிருக்க வேண்டிய நிலை உள்ளது.
இன்று நிதிநிலை அறிக்கையை அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில், “வெளிநாடு வாழ் இந்தியர் இந்தியாவுக்கு வரும் போது நாட்டுக்கு வந்த உடன் இந்திய பாஸ்போர்ட் மூலமாக ஆதார் அட்டைகள் பெற முடியும்.
முன்பு இதற்காக 180 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது அவர்களுக்கு உடனடியாக ஆதார் அட்டைகள் வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.