டில்லி:
17 – வது மக்களவையின் முதல் பட்ஜெட் இன்று முற்பகல் 11 மணி முதல் தாக்கல் செய்யப் பட்டு வருகிறது. பட்ஜெட்டில் உள்ள முக்கிய சாராம்சங்கள்…
இந்தியாவின் உயர்கல்வியை உலக தரத்திற்கு மேம்படுத்துவதற்காக புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பபட்டுள்ளதாக கூறினார். விரைவில் இது நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும்
கல்வியில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள புதிய அமைப்பு உருவாக்கப்படும்
5 ஆண்டுகளுக்கு முன் உலக தரவரிசையில் முதல் 200 இடங்களில் ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இல்லை; தற்போது 3 கல்வி நிறுவனங்கள் உள்ளன
‘மரபுசார் தொழிற்பயிற்சி மட்டுமின்றி 3டி அனிமேசன், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளிலும் பயிற்சி அளிக்கப்படும்.
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதை ஊக்குவிக்க “இந்தியாவில் பயலுங்கள்” திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும்,”விளையாடு இந்தியா” திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
பிரதமர் கவுசல் விகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்ப பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய தொலைக்காட்சியும் ஸ்டார்ட் ஆப் நிர்வாகமாகவே தொடங்கப்படும்.