2019-2020 மத்திய நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றி வருகிறார்.
அதில், பெரும்பாலான பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கவும், பல துறைகளில் அந்நிய முதலீடும் அனுமதிக்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்சூரன்ஸ் துறையில் 100 சதவிதம் நேரடி முதலீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தன்னார்வ நிறுவனங்கள் நிதி ஆதாரங்களை திரட்டுவது வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
விமான போக்குவரத்து துறை மற்றும் ஊடகத்துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பென்ஷன் திட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி முழுமையாக செயல்படுத்தப்படும்.
காப்பீட்டுத் துறையில் இடைநிலையில் அமைப்புகளுக்கு 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி.
கூடுதல் அந்நிய முதலீடு சில்லறை வணிகம் மற்றும் விமானத் துறை உள்ளிட்ட துறைகளில் அனுமதிக்கப்படும்.
ஊடகம் மற்றும் விமான துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்
உள் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மட்டும் ஆண்டுதோறும் 20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வது அவசியமாக இருக்கிறது.
அன்னிய நாடுகளின் செயற்கைக் கோள்களை செலுத்தும் அளவுக்கு வின்வெளி ஆய்வு வளர்ச்சி- நிர்மலா சீதாராமன் இஸ்ரோவின் வணிகரீதியான செயல்பாடுகளுக்காக புதிய அமைப்பு தொடங்கப்படும்-