புதுடெல்லி: இந்திய அணியின் தேர்வுக் குழுவினரிடமிருந்து இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் மாயங்க் அகர்வாலுக்கு, உலகக்கோப்பையில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; உலகக்கோப்பை லீக் போட்டிகள் முடிவடையும் தருவாயில், இந்திய அணியின் தேர்வுக் குழுவிடமிருந்து மாயங்க் அகர்வாலுக்கு அழைப்பு வந்துள்ளது. காயம் அடைந்த விஜய் சங்கருக்கு பதிலாக ஆடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது பயிற்சியாளர் முரளிதர் என்பவரிடம்தான் முதலில் தெரிவித்தார் மாயங்க் அகர்வால்.

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஆடிய வெற்றிகரமான டெஸ்ட் தொடரில், தொடக்க வீரராக களம் கண்டு தன்னை நிரூபித்தவர்தான் இந்த மாயங்க் அகர்வால். கடினமான சூழல்களிலும் மிகவும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் ஆடி தன்னை நிரூபித்தவர் மாயங்க் அகர்வால். இவர் எந்தவிதமான போட்டியிலும் சிறப்பாக செயல்படும் திறமை உடையவர் என்று கிரிக்கெட் துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் சார்பாக விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதைப் பார்க்கலாம்.

[youtube-feed feed=1]