லண்டன்:

ங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியாவுக்கும், வங்காளதேசம் இடையே போட்டி நடைபெற உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியில் இதுவரை ஆடி வந்த குல்தீப் யாதவ், ஜாதவுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 40வது லீக் ஆட்டம் இன்று பர்மிங்காமில் வங்காளதேச அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது. கடந்த ஆட்டத்தின்போது, இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்த அதே மைதானத்தில் இன்று வங்காள தேச அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

இந்திய அணி இதுவரை ஆடிய 6 ஆட்டங்களில் 5 வெற்றிகளைப் பெற்று, தோல்வியே அடையா மல் இருந்து வந்த நிலையில், கடந்த  ஞாயிற்றுக்கிழமை பர்மிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந் துக்கு எதிரான  ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் அணி வீரர்களிடையே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தின்போது   34 வயதான தமிழக வீரர்  தினேஷ் கார்த்திக், விளையாடுகிறார். இதன்மூலம் அவர் உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தை விளையாடுகிறார்.

தினேஷ் கார்த்திக் ஏற்கனவே  2004ம் ஆண்டு தோனி, சர்வதேச கிரிக்கெட்டுக்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திய அணி வீரராக அறிமுகமானார். சுமார் 15 வருடங்கள் கடந்த நிலையில், தற்போதுதான்  உலகக் கோப்பைப் போட்டியில் அவர் இடம்பெற்றுள்ளார். விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் சிறந்த பேட்ஸ்மேனும்கூட.

ஏற்கனவே கடந்த  2007ம் ஆண்டு நடைபெற்ற  ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கு தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அப்போது, அணியின்   விக்கெட் கீப்பராக தோனி இருந்ததால் தினேஷ் கார்த்திக் ஒரு ஆட்டத்தில் கூட இறங்க வாய்ப்பளிக்கவில்லை.

அதைத் தொடர்ந்து, 2011, 2015 உலகக் கோப்பைப் போட்டிகளில்  தினேஷ் கார்த்திகை தேர்வு செய்யாத நிலையில், நடப்பு உலக கோப்பை தொடரில் அவர் சேர்க்கப்பட்டருந்தார். ஆனால், தற்போதுதான் அவருக்கு அணியின் தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளது.