ண்டன்

ம்மை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என தொழிலதிபர் விஜய் மல்லையா அளித்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.

பிரபல இந்திய தொழிலதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் வாங்கி விட்டு திரும்ப தரவில்லை.  கடந்த 2016 ஆம் ஆண்டு தண்டனைக்கு பயந்து அவர் லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார்.    அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டுவர அரசு சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படது.   இதற்கு தடை இலை என நீதிமன்றம் தெரிவித்தது.

அதன் அடிப்படையில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் நாடு கடத்தும் உத்தரவை பிறப்பித்தர்.  அதை எதிர்த்து விஜய் மல்லையா பிரிடன் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.   அது நிராகரிக்கப்பட்டதை ஒட்டி அவர் மீண்டும் மனு செய்தார்.  அந்த மனுவின் மீது இன்று லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.

இந்த மனு ரத்து செய்யப்பட்டால் அதிலிருந்து 28 நாட்களுக்குள் விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும்.   ஆனால் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால் மீண்டும் விசாரணை தொடரும்.   அதனால் விஜய் மல்லையாவை உடனடியாக இந்தியா கொண்டு வருவதில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.