சென்னை:

மிழகத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் செய்துள்ள மாணவ மாணவிகள் , அதற்குரிய மதிப்பெண் சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ் போன்றவற்றின் நகல்களை உடடினயாக அனுப்பி வைக்கும்படி மருத்துவ மாணவர் தேர்வு கமிட்டி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை இணைத்துள்ளவர்கள், மீண்டும் அனுப்பி வைக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் தேர்வு கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவ மாணவிகள் கீழ்க்காணும் சான்றிதழ் நகல்களை வரும் 3ந்தேதி (நாளை) இரவு 7 மணிக்குள் mbbsbds20191@gmail என்ற முகவரிக்கு தவறாமல் அனுப்பி வைக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.

சான்றிதழ் விவரங்கள்:

1. நீட் 2019 மார்க் அட்டை

2. பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்

3. பள்ளி டிரான்ஸ்பர் சான்றிதழ் (TC)

4. சாதி சான்றிதழ்

5. இருப்பிட சான்றிதழ்

6. பிறப்பு சான்றிதழ்

7. மூல ஆவணங்கள் (Parents documents – அரசு கோட்டாவுக்கு மட்டும்)

(a) ரேஷன் கார்டு

(b) கல்வி சான்றிதழ்

(c) சாதி சான்றிதழ்

8. மைனாரிட்டி (சிறுபான்மை இனத்தவர்) அதற்கான சான்றிதழ்கள் (தனியார் ஒதுக்கீடு)

இத்துடன் ஆன்லைன் விண்ணப்ப படிவ எண் மற்றும் நீட் தேர்வு ரோல் எண்ணும் முக்கியம்.

இவ்வாறு தேர்வு கமிட்டி அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் நடப்பு ஆண்டு மருத்துவம் பல் மருத்துவ படிப்புகளுக்கு 53,176 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் ஏற்கனவே  தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும் 26ந்தேதி முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.