தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. சென்னையிலும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் இல்லாமல், லாரி மூலமாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், “இளம் வயதில் சொல்லிக்கொடுங்கள். அவர்களாகவே ஜொலிக்கக் கற்றுக் கொண்டுவிடுவார்கள். நீச்சல் ஒரு தேவையான பயிற்சி” என்று தெரிவித்தார். இந்த ட்வீட்டுடன் தன் மகனுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தையும், தனுஷ் மகனுடன் தன் மகன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.
இதை கண்டு கொந்தளித்த நெட்டிசன்கள் தண்ணீர் கிடைப்பதே அரிதாகி வரும் சூழலில் நீச்சல் குளம் புகைப்படம் எப்படி, அதில் தண்ணீருக்கு என்ன செய்கிறீர்கள் என சரமாரியாக கேள்விகள் கேட்டு திளைத்தனர் .
“நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் தண்ணீர் பிரச்சினையை மனதில் வைத்து எனது பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படப் பகிர்வை நீக்கிவிட்டேன். இளம் வயதிலேயே தேவையான பயிற்சிகளை குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதன் அவசியத்தை உணர்த்தவே அந்த புகைப்படத்தை பதிவிட்டேன் என்று விளக்கம் அளித்துள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த்