நியூயார்க்:

அமெரிக்காவில்உள்ள  புலம் பெயர்ந்தோர் நல்வாழ்வு முகாமில் உள்ளவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சுகாதாரத்தை  உறுதி செய்ய டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுக்கு மாவட்ட நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

த்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், அமெரிக்காவினுள் குடியேறும் நோக்கத்தில் அமெரிக்ககா மெக்சிகோ எல்லை நோக்கி வந்தனர். இதை ஜனாதிபதி டிரம்ப் கடுமை யாக எதிர்த்தார்.  பதவியேற்றதிலிருந்து சட்ட விரோதமாக அகதிகள் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்தால் நாடு கடத்தப்படுவார்கள் என அறிவிப்பை வெளியிட்டார்.   மேலும், அப்படிக் குடியேறுபவர்களின் குழந்தைகளும் பெற்றோர்களும் பிரிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்திருந்தார்.

இதற்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.   இதை சட்ட விரோதம் என மனித உரிமை அமைப்புகள் விமர்சித்தன. இது தொடர்பாக பல வழக்குகளும் நடைபெற்று வருகின்றன.

அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளின்  நல்வாழ்வை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும், அவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக் வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

கிளின்ட், டெக்சாஸ் அகதிகள் முகாமில்   அடைக்கப்பட்டுள்ள  குழந்தைகள் மற்றும்  பெண்கள் சுகாதார வசதியின்றியும், பசி மற்றும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகிறார்கள் என்றும் வழக்கறிஞர்கள்  குற்றம் சாட்டியிருந்தனர்.

இதையொட்டி  மாவட்ட நீதிபதி டோலி ஜி இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளளார். அகதிகளின் குழந்தைகள்  தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் தேவையான மருத்துவ வசதிகளும், மருத்துவ நிபுணர்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும் அங்குள்ள  குழந்தைகள் சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்  என்றும் உத்தரவிட்டார்.

மேலும், ஜூலை 12ந்தேதிக்குள் அங்குள்ள நிலைமைகள் சீர் செய்யப்பட வேண்டும் என்றும்  கெடு விதித்தார். மாவட்ட நீதிபதி டோலி ஜி முன்னாள் அதிபர் ஒபாமாவால் நீதிபதி நியமனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பரபரப்பான நிலையில்,  2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் பிரதிநிதி பெட்டோ ஓ’ரூர்க் (Beto O’Rourke) (டி-டெக்சாஸ்) ஞாயிற்றுக்கிழமை கிளின்ட்டில் உள்ள எல்லை ரோந்து வசதியை பார்வையிட்டார்.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் கடந்த வாரம் ஹோம்ஸ்டெட், ஃப்ள., இல் உள்ள ஒரு தடுப்புக்காவல் நிலையத்திற்குச் சென்று,  அங்குள்ள  நிலைமைகள் குறித்து கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையில்,  கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து, அமெரிக்கா, ஐரேப்பா உள்ளிட்ட பகுதிகளில் அடைக்கலம் தேடிச் செல்லும் அகதிகளின் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் (சராசரியாக நாளொன்றுக்கு ஒரு குழந்தை) உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் நலப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கால அளவில் 32,000 அகதிகள் உயிரிழந்து இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.