சென்னை:

சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திருப்பிவிட வேண்டும் என திமுக எம்பி. தயாநிதி மாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.


தமிழகம் தும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது.  குறிப்பாக, சென்னையில் பிரச்சினை உச்சத்தில் இருக்கிறது.

சென்னை தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை பாரிமுனையில் உள்ள சேகர் பாபு எம்எல்ஏ அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திமுக எம்பி. தயாநிதி மாறன் இதில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை பெதுமக்கள் பயன்பாட்டுக்கு திருப்பி விட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.