டில்லி:

ரசு துறை தொடர்பான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தின்போது, பிஸ்கட் போன்ற நொறுக்குத் தீணிகள் வழங்கப்படுவதற்கு பதிலாக இனிமேல் சத்துமிகுந்த பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகளை வழங்க வேண்டும் என்று மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்த மத்திய சுகாதாரத்துறை அனைத்து அரசு துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில், துறை ரீதியிலான நடைபெறும் மீட்டிங்கின்போது,   கேண்டீன் வாயிலாக இனி பிஸ்கட் வழங்கப்படாது. இனி துறை கூட்டங்கள் நடக்கும் போது அரசு அதிகாரிகளுக்கு வறுத்த பருப்புகள், ட்ரை புரூட்ஸ், பாதாம், டேட்ஸ், வால்நட்ஸ் போன்ற ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகைகள் மட்டுமே பரிமாற வேண்டும்.

மேலும், கூட்டங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த கூடாது. மத்திய சுகாதார துறை அமைச்சரும், தகுதிவாய்ந்த மருத்துவருமான ஹர்ஷ் வர்தன் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்து உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு துறையின் அரசு அதிகாரிகள் கூட்டம் நடக்கும்போது, காபி, டீயோடு பிஸ்கட் போன்ற ஸ்னாக்ஸ் வகைகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது அதை தடுத்து, விலைமதிப்புள்ள ஆலோக்கியமான ஸ்நாக்ஸ்களை வழங்க மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

வால்நட்ஸ், பாதாம் போன்றவை உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்பு, விட்டமின்கள், மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்சிடன்ஸை கொடுக்கின்றன. பேரீச்சம்பழம் (டேட்ஸ்) உடலுக்கு அதிக கலோரி கொடுக்கும்.

எல்லாம் சரிதான்… மக்கள் பணத்தை சாப்பிடும் அதிகாரிகள், அதை சாப்பிட்டுவிட்டு ஆலோசனை கூட்டத்தின்போது அதிகாரிகள் தூங்காமல் இருந்தால் சரி….