சென்னை:

கராத்தே தியாகராஜனின் பேச்சு திமுக-காங்கிரஸ் உறவை பாதிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு பல்லக்கு தூக்கக் கூடாது என்றும் திமுக மூத்த தலைவர் நேரு திருச்சியில் பேசினார்.

இதற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் பதிலடி கொடுத்தார். திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

இதனையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியின் பரிந்துரையின் பேரில் காங்கிரஸ் தலைமை, கராத்தே தியாகராஜனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை அவர் சந்தித்துப் பேசினார். தனது விமர்சனம் சரியானதே என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ். அழகிரியை சந்தித்து வருத்தம் தெரிவிக்குமாறு கராத்தே தியாகராஜனிடம் அறிவுறுத்தியுள்ளேன்.

கராத்தே தியாகராஜன் பேசியது, அவர் அளித்த பேட்டி ஆகியவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. அவரது பேச்சு திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நல்லுறவுக்கு பாதகமானது.

அந்த பேச்சு ஏற்புடையதல்ல என்பது என்னுடைய கருத்து என்று தெரிவித்துள்ளார்.