புதுடெல்லி:
அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும், விவசாயிகள் விதை தூவ சரியான நேரம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்த 48 மணி நேரத்தில் நல்ல மழை பெய்யும் என ஸ்கைமெட் தனியார் வானிலை மையம் அறிவித்தது.
இதனை அகில இந்திய வானிலை நிலையமும் உறுதி செய்தது.
இந்தியாவின் மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் கனமழை பெய்யும். இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் விதை தூவலாம் என ஸ்கைமெட் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் அறிவிப்பின்படி, மத்திய அரபிக் கடல், கொங்கன், மத்திய மகாராஷ்ட்ராவின் பெரும்பாலான பகுதிகளில், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் சில இடங்களில் மட்டும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா,கர்நாடகாவின் தெற்கு உள்பகுதி,கிழக்கு உத்திரப்பிரதேசம்,பீகார்,ஜார்கண்ட் மற்றும் சத்தீஷ்கரில் அடுத்த 48 மணி நேரத்தில் நல்ல மழை பெய்யும்.
குறைந்தழுத்த தாழ்வு நிலையோ அல்லது புயலுக்கான அறிகுறியோ கிடையாது என்று அனைத்து வானிலை தகவல்களும் தெரிவிக்கின்றன.