லக்னோ:

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் துணைத் தலைவராக தனது தம்பியையும், ஒருங்கிணைப்பாளராக மருமகனையும் அக்கட்சித் தலைவர் மாயாவதி நியமித்துள்ளார்.


பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய மாநாடு இன்று லக்னோவில் நடந்தது.

மாயாவதி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வாக்கு இயந்திர முறைக்குப் பதிலாக வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அறிவிப்பும் வெளியானது.

கட்சியின் துணைத் தலைவராக தனது தம்பி ஆனந்த் குமாரையும், தேசிய ஒருங்கிணைப்பாளராக மருமகன் ஆகாஷ் ஆனந்தையும் மாயாவதி நியமித்தார்.

இதனையடுத்து, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி வரிசையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் குடும்ப கட்சியாக மாறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.