[embedyt] https://www.youtube.com/watch?v=DaXrjJg7eBs[/embedyt]
Courtesy : ScoopWhoop
சமீபத்தில் ஸ்கூப்வூப் யூடியூப் பேட்டி ஒன்றில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியிடம் தொகுப்பாளர் அக்ரீதா சைம் பேட்டி எடுத்தார் .
அதில் ‘தென்னிந்தியப் படங்கள்’ என்று எங்களை போன்ற வட இந்தியர்கள் நினைத்துக்கொண்டிருப்பது வேறு , தென்னிந்தியப் படம் என்று என் பெற்றோர் என்னை அழைத்து சென்றது ‘ரோஜா’ படத்திற்கு தான் , அதன் பின் நீண்ட ஆண்டிற்கு பின் பாகுபலி படத்தைப் பார்க்க வலியுறுத்தினார். தென்னிந்தியா குறித்த கண்ணோட்டத்தை பாகுபலி படம் மாற்றிவிட்டது என எண்ணுகிறீர்களா? என கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு ராணா இந்தியர்கள் எந்தளவுக்கு முட்டாளாக உள்ளார்கள், எந்த மொழி படமோ அந்த மொழியில் பேசுகிறோம் , ஆனால் இது அந்தத் திரையுலகம், இது இந்தத் திரையுலகம் என்று நாம் தான் பிரித்துவைத்துள்ளோம். எதன் அடிப்படையில் வித்தியாசமாக இருக்கிறது? எதற்கும் எல்லை இல்லை என. நீங்களாக அதை உருவாக்கி வைப்பதால் மட்டுமே அப்படி உள்ளது என்று பதில் அளித்ததாக கூறி சமூகவலைத்தளங்களில் தென்னிந்தியத் திரையுலகை மட்டம் தட்டிய தொகுப்பாளர் அக்ரீதா சைமுக்குத் தக்க பதிலடி தந்துள்ளார் ராணா டகுபதி என்கிற உற்சாகப் பதிவுகளுடன் பலரும் இந்த உரையாடலின் நடுவே தெலுங்குப் படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் இணைக்கப்பட்டு பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால் நடந்தது என்பதோ வேறு . கேள்வி அதே கேள்வி தான் ஆனால் அதற்கு, இதர மாநிலங்கள் குறித்து இந்தியர்கள் எந்தளவுக்கு முட்டாளாக உள்ளார்கள்… என்று பதில் அளிக்கவில்லை ராணா டகுபதி.
பாகுபலி பற்றிய கேள்வியை முதலிலேயே கேட்டுவிடுகிறார் அக்ரீதா சைம் (0.45).
தென்னிந்தியா குறித்த கண்ணோட்டத்தை பாகுபலி படம் மாற்றிவிட்டது என எண்ணுகிறீர்களா என்கிற கேள்விக்கு ராணா ஆமாம் என்றே கூறுகிறார். ஆனால் சமூகவலைத்தளங்களில் ராணா டகுபதி பதில் அளிப்பதாக எடிட் செய்யப்பட்டுள்ளது.
வெவ்வேறு திரையுலகங்களில் நீங்கள் பணியாற்றியுள்ளீர்கள். அதில் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள் என்கிற கேள்விக்கு (34.19), இந்தியர்கள் எந்தளவுக்கு முட்டாளாக உள்ளார்கள், இதர மாநிலங்கள் குறித்து என்று பதில் அளிக்கிறார் ராணா.
ஆனால், சமூகவலைத்தளங்களில் பரவும் விடியோவில், பாகுபலி – தென்னிந்திய சினிமா குறித்த வட இந்தியர்களின் பார்வை குறித்த கேள்விக்கு அப்படிச் சொன்னது போல மாற்றி ஒரு தவறான கண்ணோட்டத்தை உருவாக்கியுள்ளனர்.