டில்லி: ‘

17வது மக்களவையில் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அவைகளின் முதல் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு உரையாற்றினார்.

முன்னதாக ராம்நாத் கோவிந்த் சாரட் வண்டியில் ஊர்வலமாக நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். நாடாளுமன்ற வளாகம் வந்த அவரை லோக்சபா சபாநாயகர், பிரதமர் மோடி உள்பட மூத்த தலைவர்கள் வரவேற்று சபைக்குள் அழைத்து வந்தனர்.

அதையடுத்து ஜனாதிபதி புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு தனது உரையை வாசிக்கத் தொடங்கினார்.

தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்தை பாராட்டுகிறேன்  என்று கூறியவர் மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். மக்களவைக்கு தேர்வாகியுள்ள புதிய உறுப்பினர்களை நான் மனதார வரவேற்கிறேன் என்று வாழ்த்தினார்.

‘நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் வளர்ச்சி செல்ல வேண்டும் என்பதே இலக்கு. ஒவ்வொரு குடிமகனின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள்  என்று கூறியவர். கடந்த 5 ஆண்டுகளில் அரசின் செயல்பாடுகளில் மக்கள் திருப்தி பாதுகாப்பான இந்தியாவை கட்டமைப்பதில் அரசு உறுதியாக உள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். எந்த வித குழப்பம் இல்லாமல் மக்கள் தெளிவாக தீர்ப்பளித்துள்ளனர் என்றவர், மக்களவையில் முதல்முறையாக அதிக மகளிர் இடம்பெற்றிருப்பது பெருமையானது என்று கூறினார்.

முத்தலாக் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், பெண்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திறன் மேம்பாடு மற்றும் இளைஞர் நலனுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

நகரங்களோடு கிராமங்களும் வளர்ச்சி பெற திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. புதிய இந்தியாவை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஒருங்கிணைந்த வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. வறட்சி பாதித்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது சாதி, பேதமற்ற புதிய இந்தியாவை உருவாக்குவதே இலக்கு.

பெண் குழந்தையைப் பாதுகாப்போம் திட்டத்தின் மூலம் பாலின விகிதம் மேம்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு பெரும் கவலையாக மாறியுள்ளது .ஜல்சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.

வேளாண் வளர்ச்சிக்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். விவசாயி களுக்கான நலத்திட்ட உதவிகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது  வறட்சி பாதித்த பகுதிகளை மீட்டெடுக்க சிறப்பு திட்டங்கள். வேளாண் துறையின் 25 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும்.

சுகாதாரத்துறையை மேம்படுத்த அரசு முழு முயற்சி மேற்கொண்டுள்ளது . மருந்து பொருட்களை மலிவான விலையில் கிடைக்க நடவடிக்கை. நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார மையங்கள் புதிதாக அமைக்கப்படும்.

வங்கி சேவைகளை வீட்டு வாசலுக்கே கொண்டு வர நடவடிக்கை.பிரதமரின் முத்ரா யோஜனா மூலம் 19 கோடி பேருக்கு கடனுதவி.முத்ரா யோஜனா திட்டம் 30 கோடி பேருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது

உலக அளவில் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. மேலும்  வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.  திறன் மேம்பாடு மற்றும் இளைஞர் நலனுக்கு அரசு முக்கியத்துவம்

ஊழலை எந்த வடிவிலும் இந்த அரசு பொறுத்துக்கொள்ளாது.

சிறு தொழில் வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி பெரிய அளவில் உதவுகிறது. நாட்டின் எதிர்காலத்தில் இளைய தலைமுறையினர் முக்கிய அங்கம் வகிப்பார்கள்.  சிறு, குறு வணிக நிறுவனங்களுக்கு என சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன .

தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில்  இந்தியா 77-வது இடத்திற்கு முன்னேற்றம்

வரி செலுத்துவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அரசு அதிக கவனம் செலுத்துகிறது

ரியல் எஸ்டேட் துறையில் நடைபெற்று வந்த முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன.

2022ல் ஜி-20 மாநாட்டை இந்தியாவில் நடத்தப்படும்.

கிராமங்களில் அடுத்த 3 ஆண்டுகளில் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

கேலோ திட்டத்தின் மூலம் இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.

விரைவில் புதிய தொழில்கொள்கை செயல்படுத்தப்படும், மிகப்பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் முதல் 3 இடத்துக்குள் வர இந்திய முயற்சி.

கருப்பு பணத்திற்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது  இந்தியாவில் பொருளாதாரக் குற்றம் செய்தவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் தப்ப முடியாத அளவுக்கு சட்டத் திருத்தம் செய்யப்படும்.

நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்த அதிநவீன ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை.

2022ம் ஆண்டுக்குள் 35 ஆயிரம் கிலோ மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்க அரசு திட்டம்.

வறட்சி பாதித்த கிராமங்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

 

இவ்வாறு அவர் பேசினார்.