சென்னை:
தென்னக ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் இந்தியில்தான் பேச வேண்டும் என்று இன்று தென்னக ரயில்வே பொதுமேலாளர் அனுப்பிய சுற்றறிக்கை, திமுக போராட்டத்தின் காரணமாக உடடினயாக ரத்து செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தென்னக ரயில்வே பொதுமேலாளர் அனைத்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் புதிய சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் அனைத்து ரயில்வே கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், நிலைய அலுவலர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும், தமிழில் பேசக் கூடாது தென்னக ரயில்வே பொதுமேலாளர் அனைத்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
இது தமிழகத்தில் பிரளயத்தை ஏற்படுத்திய நிலையில், திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், திராவிடர்கழகம் உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். திமுக தலைமை உடடினயாக மாநிலம் முழுவதும் உள்ள ரயில்நிலையங்கள் முன்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது.
சென்னையில் தென்னக ரயில்வே அலுவலகம் முன்பு திமுகவினர் போராட்டத்தை முன்னெடுத்த னர். போராட்டத்தில் கலந்துகொண்ட மத்திய சென்னை திமுக. எம்.பி. தயாநிதி மாறன் தலைமை யில் திமுக முக்கிய பிரமுகர்கள் , இந்தி திணிப்புக்கு கண்டனம் தெரிவித்து, சென்னையில் உள்ள ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து பேசினர். அப்போது ரயிவேயின் சர்க்குலரை வாபஸ்பெற வலியுறுத்தி மனுவும் அளித்தனர்.
அப்போது திமுகவினரிடம், சர்ச்சைக்குரிய சர்க்குலர் வாபஸ் பெறப்படும் என ரயில்வே பொது மேலாளர் உறுதி அளித்த நிலையில், தற்போது, அது தொடர்பாக புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் ஏற்கனவே அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.