டில்லி

ள்துறை அமைச்சர் அமித் ஷா வை இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. அக்கட்சி தமிழகத்தில் தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது  . இந்த தோல்விக்கு அதிமுகவின் இரட்டை தலைமை காரணம் என கட்சிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது. இரு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என குரல் எழுப்பி உள்ளனர்.

இதனால் ஆளும் கட்சியான அதிமுகவில் விரிசல் ஏற்படலாம் என பரவலாக பேசப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதற்கு அரசு பதில் அளிக்காததால் ஆளுநர் தலையிட்டு சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டில்லி சென்றுள்ளார். அவர் இன்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசி உள்ளார்.