சென்னை:

திமுகவில் நிலவி வந்த உட்கட்சி பூசல் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில்,  அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

வரும் 12ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க உள்ளதாக அதிமுக தெரிவித்து உள்ளது.

நடைபெற்று முடிந்த லோக்சபாதேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்த நிலையில், அதிமுக வில் இரட்டை தலைமை தேவையில்லை ஒன்றை தலைமைதான் வேண்டும் என்று நிர்வாகிகள் பலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். தோப்பு வெங்கடாச்சலம் போன்றவர்கள் அமைச்சர் பதவி கேட்டு  மிரட்டி வருவதாகவும் கூற ப்படுகிறது.

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என மதுரையில் ராஜன் செல்லப்பா கூறியது போல் கருத்துகளை தெரிவிப்பதால், கட்சிக்குள் சலசலப்பு உருவாகும். என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் வரும் 12ம் தேதி நடைபெறும் என்று அதிமுக தலைமை அழைப்பு விடுத்து உள்ளது.இநத நிலையில், பற்றி நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் விவாதிக்க உள்ளனர்.  இதில், அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது பற்றியும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.