புதுடெல்லி:

பாகிஸ்தான் பாலக்கோட்டில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை, ரூ.300 கோடிக்கு இஸ்ரேலிடம் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்யவுள்ளது.


பாகிஸ்தான் பால்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 26 முறை குண்டு வீச்சு நடத்தி தீவிரவாதிகள் முகாம் தகர்க்கப்பட்டது.

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து, இந்தியா விமானப் படை இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியது.

எனினும் இந்திய விமானப் படை தாக்குதலில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் தெரிவித்தது.

இந்நிலையில், பாலக்கோட்டில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை ரூ.300 கோடிக்கு வாங்க, இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.